மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை!

Photo of author

By Parthipan K

மகளாக திரைப்படத்தில் நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதி மறுப்பு! அதிர்ச்சியில் நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.நிஜ வாழ்க்கையிலும் அவர் தனக்குப் பிடித்ததையே செய்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.மேலும் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இவரின் நடிப்பானது இயல்பாகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

ஆரம்பக் கட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.பின்னர் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார்.இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன.பின்னர் இவர் விக்ரம் வேதா திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.இந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

அதன்பின்னர் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பார்.இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து நடிக்கிறார்.இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இவர் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் நடித்த உப்பெனா என்ற தெலுங்கு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார்.இவருக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை நடித்திருப்பார்.தற்போது தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி செட்டிக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக தன்னால் நடிக்க முடியாது என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.இதனால் நடிகை கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.தெலுங்குத் திரையுலகம் இவரது முடிவால் ஆச்சரியத்தில் உள்ளது.