ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

Photo of author

By அசோக்

ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

அசோக்

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், ஊடகங்களிடம் பேசியபோது ‘விஜய்க்கு நான் வியூகம் வகுத்து கொடுக்க தேவையில்லை. அவருக்கு நிறைய ஆதரவு இருக்கிறது’ என பேசியிருந்தார். தவெக விழாவில் பேசிய விஜய் மும்மொழிக்கொள்கை விஷயத்தில் எல்.கே.ஜி, யூகேஜி மாணவர்களை போல சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என பேசியிருந்தார்.

இந்நிலையில், மார்ச் 8ம் தேதியான இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேடைகளில் பேசுவது போல பேசாமல் அமைதியாக நிதானமாகவும் மிகவும் மெதுவாகவும் பேசியிருக்கிறார். அதில் ‘தமிழகத்தில் உள்ள என் தாய், மகள், தோழிகள் போல உள்ள எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு மகளிர் தினம் எப்படி கொண்டாடுவது என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை. மகளிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம் என பேசியிருக்கிறார்.