நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

0
127
#image_title

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு நடனம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியன் தியனரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர். வெங்கட் பிரபு அவர்கள் இயக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும் தளபதி68 திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், ஜெய், சினேகா ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தளபதி68 திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி முதல் ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இந்த பாடல் காட்சிக்கு நடிகர் பிரபுதேவா அவர்களின் சகோதரரான ராஜூசுந்தரம் அவர்கள் நடனம் அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Previous articleஅரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!
Next articleபுலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!