பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்!

0
83
Actor vijay's beast movie update
Actor vijay's beast movie update

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.மேலும் நடிகர் விஜய் நடிக்கும் 65வது திரைப்படம் இதுவாகும்.

பெரும் நடிகர் பட்டாளத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.பூஜா ஹெக்டே,யோகிபாபு,இயக்குனர் செல்வராகவன்,விடிவி கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்திற்கான எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.மேலும் இந்த திரைப்படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து படக்குழு பேசி வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.கோலமாவு கோகிலா,டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குவது மேலும் எதிர்பார்ப்பை கூடியுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் இரண்டும் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு அடுத்த வருடம் பொங்கலுக்கு இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த தகவலால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான அனைத்துப் படங்களும் நல்ல வெற்றியைத் தந்துள்ளன.அதே போல் இந்த படமும் வெற்றியைக் கொடுக்கும் என படக்குழுவும் ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர்.ஆனால் இந்த தகவலை இன்னும் அதிகரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை.விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

author avatar
Parthipan K