தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை!

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை!

நமது தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான ரஜினி,கமல் இவர்களை அடுத்து இருப்பவர் விஜய் தான்.இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அதுமட்டுமின்றி இவர் அரசியலுக்குள் வர வேண்டுமென்று இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்தனர்.அவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை எஸ்.சந்திரசேகர் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி அந்த கட்சியின் தலைவராக அவர்களது உறவினர் பத்மனாபன்,அக்கட்சியின் பொது செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்களை கூறினர்.

இந்த செய்தியானது திரையுலகு மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அதனையடுத்து கட்சியினை பதிவு செய்வதாக வெளிவந்த தகவல் தவறானது என்று கூறினர்.அதனையடுத்து விஜய் அவர்கள்,தனது பெயரை பயன்படுத்திக்கொண்டு கூட்டங்கள் அல்லது இதுபோல கட்சி பதிவு செய்வது போன்றவற்றை செயல்படுத்த ஏற்பாடுகளும் செய்யும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ,தாயார் ஷோபா மற்றும் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க கோரி சென்னை நகர 5 வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கானது ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் எதிர் மனு தாரர்களாக சங்கங்களின் பதிவாளர்,தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜெ.ஜெகன்,முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார்,முத்து,விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கே.பாரதிதாசன்,இன்பண்ட் யோகராஜ்,விஜய் தந்தையின் உறவினர்,அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர்.பத்மனாபன்,அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ சந்திரசேகர்,மற்றும் பொருளாளர் ஷோபா ஆகியோர் ஆவர்.கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கானது தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையானது ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது.அந்த விசாரணையில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என கூறினர்.அப்பொழுது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொருளாளர் ஷோபா தரப்பில் அதற்கு பதில் மனு தாக்கல் செய்தனர்.ஆனால்விஜய் தரப்பில் எந்தவித வக்கீல் ஆஜராகவில்லை.ஆகையால் அந்த பதில் மனுக்களை நீதிபதி,அவர்களிடமே திருப்பி அளித்தார்.மீண்டும் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி இம்மாதம் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment