நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய் ‘மக்கள் இயக்கம்’

Photo of author

By Parthipan K

பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், ‘தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம், வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர் இறுதி செய்வார்” என்றும் கூறினார்.

தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய், சமீப காலமாக தனது படங்களில் சமூக, அரசியல் பிரச்சனைகளை பேசி வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அபரிதமான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. மார்ச் முதல் வாரத்தில், சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மேயர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.