TVK DMK: 2024 யில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தற்பொழுது வரை அதற்கான வேலைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மேலும் அவர் சமீபத்தில் நடத்திய மாநாட்டில் அவரது பேச்சு தொடர்பான சர்ச்சைகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கு இவ்வளவு ஆதரவாளர்களும், தொண்டர்களும், சேர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு திரையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தக்கவைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் புதிய கட்சிக்கு முதல் மாநாட்டிலேயே அவ்வளவு கூட்டம் வந்தது இதுவே முதல் முறையாகும். விஜய் தனது இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “அங்கிள்” என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது குறித்து நா.த.க வின் தலைவர் சீமான் அவர்கள், முந்தைய மாநாட்டில் சீ.எம் சார் -ஆக இருந்தவர், இரண்டவது மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் .காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை -யும் அவர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் -யின் அரசியல் மாநாட்டில் தொண்டர் ஒருவர் பவுன்சர்களால் தாக்கப்பட்டது தொர்பாக விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பெரும் நகரங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்ளும் நிலையில் விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை கிராமப்புறங்களில் மேற்க்கொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அனைவரிடத்திலும் இருந்து தனித்து காணப்படுகிறது.
செப்டம்பர் 7 ஆம் தேதி விஜய் நடைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஆளும் கட்சிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது போன்ற முயற்சிகள் தமிழக அரசியலில் தனது இடத்தை வலுவாக அமைப்பதற்கான வீயூகமாக பார்க்கப்படுகிறது. திராவிட கட்சிகளின் எதிர்ப்பை சமாலிப்பதே விஜய்க்கு பெரிய சவாலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.