பேய் படத்தில் விஜய் சேதுபதியா? அறிமுக இயக்குனர் என்ன சொல்கிறார்?

Photo of author

By Parthipan K

பேய் படத்தில் விஜய் சேதுபதியா? அறிமுக இயக்குனர் என்ன சொல்கிறார்?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்களில் தவிர்க்கவே முடியாத நடிகர் ஆகிவிட்டார்.இவரின் நடிப்பானது அனைத்துத் தரப்பு மக்களையும் கவரக் கூடியதாக இருக்கிறது.இதனால் அவர் தொடர்ந்து நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவரின் காமெடி,சண்டை,வில்லத்தனம்,காதல்,சென்டிமெண்ட் என அனைத்து விதமான பரிமாணங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தற்போது விஜய் சேதுபதி விக்ரம்,காத்து வாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்து முடித்து வெளிவரக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஏராளம்.துக்ளக் தர்பார்,லாபம்,கடைசி விவசாயி,அனபெல் சேதுபதி போன்ற திரைப்படங்கள் வெளிவருவதற்குத் தயாராக உள்ளன.இதனிடையே துக்ளக் தர்பார் திரைப்படம் செப்டம்பர் 10 அன்று சன் தொலைக்கட்சியில் நேரடியாக வெளியாக இருக்கிறது.லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 அன்று தியேட்டரில் வெளியிடப்படுகிறது.

அனபெல் சேதுபதி திரைப்படமானது காமெடி கலந்த பேய் படமாக வெளிவர இருக்கிறது.இதற்கு முன்னர் அனபெல் சுப்ரமணியம் என்று இந்த படத்திற்கு பெயர் வைத்திருந்தனர்.தற்போது பெயரை மாற்றி வைத்துள்ளனர்.இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார்.இவர் பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் ஆவார்.Passion Studios நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.டாப்சி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.மேலும் சேத்தன்,தேவதர்ஷினி,ராதிகா,யோகிபாபு ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.டாப்சி இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி வலைத்தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை டாப்சியும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் எடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குனர் தீபக் தெரிவித்துள்ளார்.