Chiyan vikram: சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, இப்படத்திற்கு அதிக அளவில் வரவேற்பும் இருந்தது. ஒருபக்கம், இந்த படத்திற்காக அதிக அளவில் விக்ரம் புரமோஷனும் செய்தார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஹைதராபாத், கேரளா போன்ற இடங்களுக்கும் சென்று படக்குழு புரமோஷன் செய்தது.
ஒருபக்கம் பல ஊடகங்களிலும் படக்குழு பேட்டி கொடுத்தது. விக்ரம் கலர் கலர் சட்டைகளை அணிந்துகொண்டு சென்று ரசிகர்களிடம் படம் பற்றி பேசி புரமோஷன் செய்தார். அதேநேரம், கடந்த 27ம் தேதி காலை வெளியாகவிருந்த இந்த படம் வெளியாகவில்லை. ஓடிடி உரிமை தொடர்பாக இப்படத்தில் முதலீடு செய்திருந்த சில நிறுவனங்களுடன் பிரச்சனை ஏற்பட்டதே காரணம் என சொல்லப்பட்டது.
அதன்பின் பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு படம் மாலை 5 மணிக்கு வெளியானது. விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார் சியான் விக்ரம். அந்தவகையில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றபோது அவரின் காரின் மேல் ரசிகர்கள் ஏறிக்கொண்டார்கள். எனவே, சரியான ஏற்பாடுகளை தியேட்டர் நிறுவனம் செய்யாத கோபத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் விக்ரம்.