‘தளபதி 67’ படத்தில் வில்லனாக நடிக்கிறேனோ ? நடிகர் விஷால் விளக்கம் !

0
116

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘தளபதி 67’. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இந்த படத்தின் பூஜை சென்னையின் ஏவிஎம் ஸ்டுடியோஸில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. விக்ரம் படத்திற்கு போன்று ‘தளபதி 67’ படத்திற்கும் ப்ரோமோவுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாகவே தளபதி 67 படம் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.Thalapathy Vijay and Lokesh Kanagaraj's project: THIS popular actor roped  in to play a key role? | PINKVILLA

சில நாட்களுக்கு முன்னர் வெளியான தகவல்களின்படி ‘தளபதி 67’ படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் மற்றும் இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. மேலும் நீண்ட நாட்களாகவே இப்படத்தில் நடிகர் விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம் விஷால் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் சில செய்திகள் வெளியானது.വിജയ്-ലോകേഷ് കനകരാജ് ചിത്രത്തിൽ വിശാലും? വീഡിയോ വൈറലാവുന്നു, Vishal, Vishal  Viral Video, Thalapathy 67, Vijay, Lokesh Kanagaraj, Vishal New Movies,

தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘தளபதி 67’ தான் நடிக்கிறேனா இல்லையா என்பது குறித்து நடிகர் விதால் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். விஷால் கூறுகையில், “நான் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை, லோகேஷ் என்னிடம் வந்து பேசினார் ஆனால் அந்த சமயத்தில் எனக்கு அடுக்கடுக்காக வேலைகள் இருந்ததால் என்னால் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. அதேசமயம் எனக்கு விஜயை வைத்து படமெடுக்க வேண்டும் என்று ஆசை உள்ளது, துப்பறிவாளன்-2 படம் முடிந்ததும் விஜய்யிடம் கதை சொல்லி அவரை எனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

author avatar
Savitha