திருப்பதி சென்ற நடிகர் விஷால்!!! எதற்காக என்று தெரியுமா!!?

Photo of author

By Sakthi

திருப்பதி சென்ற நடிகர் விஷால்!!! எதற்காக என்று தெரியுமா!!?

Sakthi

திருப்பதி சென்ற நடிகர் விஷால்!!! எதற்காக என்று தெரியுமா!!?

நடிகர் விஷால் அவர்கள் தற்பொழுது திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை(செப்டம்பர்15) வெளியாகவுள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, டிரிபிள் ஏ, பஹீரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூரியா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் செல்வராகவன், நடிகை ரிது வர்மா, நடிகை அபிநயா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டைம் டிராவல் ஆக்சன் திரைப்படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விஷால், நடிகர் எஸ்.ஜே சூரியா இருவரும் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா அவர்களையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக திரைப்படத்தில் கொண்டு வந்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை(செப்டம்பர்15) வெளியாகவுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் விஷால் அவர்கள் இன்று(செப்டம்பர்14) காலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நடிகர் விஷால் அவர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் விஷால் அவர்கள் திருப்பதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.