பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

Photo of author

By Parthipan K

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

தமிழ் சினிமாவில் 80 களில் நடிகர், இயக்குனர் ,கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு . தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக களமிறங்கி ரஜினிகாந்த் நடித்த “தில்லுமுல்லு” படத்திற்கு வசனகர்த்தா ஆனார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்” படம் மெகா ஹிட்டானது.

இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். நீண்டகாலமாக சினிமாவிலிருந்து ஓய்வில் இருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார். இன்று வயது மூப்பின் (74) காரணமாக மரணமடைந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.