மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக் ஆவார். அதனைத் தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
அப்துல் கலாமின் சிறந்த நண்பராகவும் விவேக் அவர்கள் விலகி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்துல் கலாம் அவர்களிடம் தன்னுடைய அலட்சியமாக ஒரு கோடி மரங்கள் நடுவே என கூறிய இவர் அதனையே தன் வாழ்நாள் லட்சியமாகவும் கொண்டிருந்த நிலையில் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குள் இறைவனடி சேர்ந்து விட்டார்.
பொதுவாக இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் மட்டுமே உள்ளது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இவர்களைத் தாண்டி இரட்டைக் குழந்தைகள் தங்களுக்கு பிறந்தது என்று தெரிவித்திருக்கிறார் விவேக் அவர்களின் மனைவி.
இவர்களுக்கு முதல் இரண்டு பெண்கள் மற்றும் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அபார பிறந்த மகன் பிரசன்னா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2015 ஆம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார்.
அவர் இறந்த பின்பு விவேக் மற்றும் அருள்செல்வி தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்களுக்கு முறையே பிரசாந்தினி மற்றும் பிரார்த்தனா என பெயர் வைத்ததாகவும் விவேக் அவர்களின் மனைவி அருள் செல்வி தெரிவித்து இருக்கிறார். இந்த இரட்டை குழந்தைகள் தற்பொழுது ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும் 2017 ஆம் ஆண்டில் தான் இவர்கள் இருவரும் பிறந்தநாள் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய முதல் பெண் அமிர்தா நந்தினி. இவர் ஒரு சிறந்த ஆர்க்கிடெக்டராக இருக்கிறாராம். இரண்டாவது மகள் தேஜஸ்வனி இவருக்கு தான் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவருடைய கணவர் பரத், அமேசான் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும் தகவல்கள் தருவதற்கின்றன.
தங்களுக்கு இரட்டை குழந்தைகள் இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு பெயர் வைத்த சுவாரசியமான கதையையும் பகிர்ந்திருக்கிறார் விவேக் அவர்களின் மனைவி அருள் செல்வி. ஒருமுறை இவர்கள் காஞ்சிபுரம் அருகே இருந்த கோ சாலையை பார்வையிட விவேக் சென்ற பொழுது அங்கிருந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் எவ்வளவு தூரம் இருக்கும் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இங்கிருந்து மிகவும் பக்கம் கால் மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறியிருக்கின்றனர்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைத்த விவேக் மனைவி மற்றும் மகள்கள் கூறிய பெயர்களை எழுதி ஐயரிடம் கொடுத்த அம்மன் காலடியில் குலுக்கி போட்டு இரண்டு சுருள்கள் மட்டும் எனக்கு எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் அதேபோல் ஐயரும் இரண்டு சுருள்கள் மட்டுமே விதைக்கிடம் கொடுத்திருக்கிறார் அதில் எழுதப்பட்டிருந்த பெயர் தான் பிரார்த்தனா மற்றும் பிரசாந்தினி என்று விவேக் அவர்களின் மனைவி தெரிவித்திருக்கிறார்.