திக்குமுக்காடிய நகைச்சுவை நடிகர் விவேக்!!

Photo of author

By Parthipan K

சினிமா திரையுலகில் முன்னணி நகைச்சுவையாக திகழும் நடிகர் விவேக், இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான கருத்துக்களை தன்னுடைய காமெடியோடு நகைச்சுவையாக சரமாரியாக திரைப்படத்தில் அள்ளி விடுவார்.

கருத்துக்கள் செறிவு மிகுந்த  காமெடிகள் மூலம் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இவர் பெரும் பங்காற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது இவர் பல விழிப்புணர்வு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

லாக் டவுன் காலகட்டத்தில் அதாவது விவேக்கின் பல்வேறு காமெடி காட்சிகளின் ஸ்டில்களை பதிவிட்டு, தோற்று போகாத ஒரே நகைச்சுவை நடிகர், இளைஞர்களை ஊக்குவிப்பது, தனது டயலாக் மூலம் சமூகத்திற்கு கருத்துக்கு மெஸேஜ் சொல்வது என  ரசிகர் பலரும் இவரை ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த விவேக் “என்னைப் போன்ற கலைஞர்களுக்கு ரசிகர்களின் பாராட்டு தான் மிகப் பெரிய டானிக்.. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!” என்று பெருமிதத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.