எனக்கு மேரேஜ் லாம் செட் ஆகாது!! எஸ் ஜே சூர்யா ரூட்டை கையில் எடுத்த நடிகர்!!

Photo of author

By Gayathri

திரைப்படம் ஒன்று எடுக்கின்றனர் என்ற பொழுது திரைப்படத்தின் இயக்குனரோ துணை இயக்குனரோ அல்லது வேறு சிலரோ அப்படத்தில் ஏதேனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விடுவது தமிழ் சினிமா துறையில் வழக்கமாக உள்ள ஒரு நிகழ்வாகும்.

ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர் நடிகராக நடித்துள்ளார் என்று யாரையும் கூற முடியாது. ஆனால், அதற்கு விதிவிலக்காக நடிகர் நடராஜ் அவர்கள் மாறி இருக்கிறார்.

நடராஜ் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த அவரின் முதல் படமான சதுரங்க வேட்டை படத்தில் நடித்திருக்கிறார். ஆசையைத் தூண்டி பல வழிகளில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என அழகாக இப்படத்தில் எச் வினோத் அவர்கள் காட்டியிருப்பார். கதாபாத்திரத்திற்கு நடராஜ் அவர்கள் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவாளராக வேலை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் மிளகா போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதிலும் பெரும்பாலான படங்களில் போல அதிகாரியாகவே நடித்திருப்பார்.

இவை மட்டுமின்றி தனுஷ் உடன் கர்ணன் படத்திலும், விஜய் சேதுபதி உடன் மகாராஜா படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்பொழுது 51 வயது ஆகிறது. இவர் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இதனைப் பற்றி ஊடகம் கேட்டபொழுது, நடராஜ் அவர்கள் எனக்கு திருமணம் என்பது செட் ஆகவே இல்லை என்றும் மனதிற்குள் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் நாம் வேலைக்கு சென்று திரும்பும் வரை நமக்காக ஒரு பெண் நம்முடைய வீட்டில் காத்திருக்க வேண்டும்.

அது அந்தப் பெண்ணிற்கு மிகவும் கஷ்டமானதாக இருக்கும். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. என் அம்மா என்னை தொடர்ந்து திட்டிக்கொண்டு தான் இருப்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இவர் கூறியதைப் போன்றே எஸ் ஜே சூர்யாவும் இதே காரணத்தை கொண்டு தான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.