விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!
ரீபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியை விமானப்பயணத்தின் போது கேள்விகள் கேட்ட நடிகர் குனால் கம்ரா விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அதில் விமானப் பயணத்தின் போது தனது அருகே அமர்ந்திருந்த தொலைக்காட்சி செய்தியாளர் அர்னாப் கோசாமியை வீடியோ எடுத்துக்கொண்டே பல கேள்விகளை எழுப்பினார்.
தொலைக்காட்சி விவாதங்களில் விடாமல் கத்தும் அர்னாப் அவர் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக தனது லேப் டாப்பை நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது குனால் ’ரோஹித் வெமுலா 10 பக்க கவிதையை படியுங்கள்.உங்களுக்கு இதயம் இருந்தால் எனவும் நீங்கள் தேசியவாதியா அல்லது கோழையா? சொல்லுங்கள் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் (Viewers wants to know) ‘எனக் கேட்டு அவரைத் துளைத்தெடுத்தார்.
இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அர்னாப்பைப் பலரும் கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிலரோ இது நாகரீகமான செயல் அல்ல என்று விமர்சிக்கவும் செய்தனர். இந்நிலையில் சம்மந்தபப்ட்ட விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக குனால் கம்ராவுக்கு தங்கள் விமானத்தில் செல்ல 6 மாதம் தடை விதித்துள்ளது.
ஆனால் குனால் மீது அர்னாப் புகார் கொடுத்தாரா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து பலரும் எந்த அடிப்படையில் குனால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.