150 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நடிகர்!! இவருக்கு இவ்வளவு மதிப்பா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஏழு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தனது நடிப்பாற்றல் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி இடம் வகிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும் நடிகர் விக்ரம் வேறு சமூக நிகழ்ச்சிகளையும் முன்னிறுத்தி நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும், வித்யா சுதா என்னும் மாற்றுத்திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேலையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் தன்வயப்படுத்தி கொண்டுள்ளார்.
இவரின் மகன் துருவ் விக்ரம் தற்போது அண்மையில் ஒரு படம் நடித்து அவரும் தன் தந்தையை போல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். மேலும் நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் சொத்து விவரம் பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. இதில் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு சுமார் 120 முதல் 150 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விக்ரம் பயன்படுத்தும் சொகுசு காரின் மதிப்பு 2.7 கோடி இருக்கும் என பேசப்படுகிறது. நடிகர் விக்ரம் பயன்படுத்தும் சொகுசு காரின் பெயர் ஆடி R8 ஆகும். மேலும் இந்த சொத்து விவர பட்டியல் சினிமா வட்டாரங்களில் மட்டுமே பேசப்பட்டு வருகிறது. இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.