விஷ பாம்பை கையில் வைத்து விளையாடிய பிரபல நடிகர்! ரசிகர்கள் எச்சரிக்கை.!!

Photo of author

By Jayachandiran

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி2 படத்தில் வில்லனாக நடித்தவர். இதற்கு முன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் வெளியான அபியும் நானும் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கூதரா, ஆமி, நாம், லூசிபர், வைரஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் டோவினோ தாமஸ் தற்போது வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு ஒன்று அவரது கையில் சுற்றியபடி நெளிந்து வருகிறது. இதைப்ப பார்த்த ரசிகர்கள் கடித்து விட போகிறது என்று பயத்துடன் கமண்ட் செய்கின்றனர்.

 

கேரளாவில் வாவா சுரேஷ் என்பவர் பாம்புகளை பிடித்து விளையாடுவதில் மிகவும் ஆனவர். அவருக்கு அடுத்த வாவா சுரேஷ் நம்ம டோவினோ தாமஸ்தான் என்று பலரும் எழுதி வருகின்றனர். மேலும் சிலர் பாம்பை இப்படியா பிடித்து கையில் வைத்திருப்பது. கவனமா இருங்க என்று கூறிவருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.