யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ?

0
142

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ?

இயக்குனர் சிம்புதேவன் தனது தனித்துவமான படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

அப்படி அவர் நடிக்க ஒப்பந்தமாகும் படங்களில் இயக்குனர் சிம்புதேவனோடு இணையும் படமும் ஒன்றாக அமைந்துள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த கதையில் யோகிபாபுவை இயக்குகிறாராம் சிம்புதேவன். இதற்கிடையில் இந்த படம் கைவிடப்பட்ட இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம்தானோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் இது முற்றிலும் வேறு கதை என்று சொல்லப்படுகிறது.

மிகப்பெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்போடு வடிவேலுவுக்கு கருத்து வேறுபாடு எழுந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் பல கோடி ரூபாய் தயாரிப்பு தரப்புக்கு நஷ்டம் ஏற்பட வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டது. பின்னர் பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமாகி வடிவேலு பல படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். ஆனால் அந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.