சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் நடிகர் பாபூஸ் ராதிகாவுடன் தான் நடிக்கும் போது நடந்த சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல்வேறு ரோல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் பாபூஸ். இவர் வாணி ராணி, அரசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பாபூஸ் இந்த சீரியல்களுக்கான ஷூட்டிங்கில் இருந்தபோது தனக்கும் நடிகை ராதிகாவுக்கும் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நான் பார்த்து வியந்து போன நடிகர் நடிகை என்றால் அது நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் தான். ஏனெனில் ராதிகாவோடு பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். முக்கியமாக வில்லன் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அப்படி நான் அரசி சீரியலில் வில்லனாக நடிக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அரசி சீரியலில் ராதிகா சரத்குமாருக்கு போலீஸ் வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. நான் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருப்பேன்.
அப்போது ஒரு காட்சிக்கான ஷூட்டிங் நடந்தது. அதில் நான் ராதிகாவின் அறைக்கு கோபமாக செல்ல வேண்டும். அப்போது ராதிகா என்னிடம் ஒரே ஒரு நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள இந்த இடத்தை விட்டு வெளியே போய்டுனு சொல்லுவாங்க. நீ சொன்னதும் வெளியே போக நான் பயந்தவன் இல்லை நான் பாண்டியன் என்று ஒரு வசனம் பேசுவேன்.
நான் ரொம்ப நேரம் வசனம் பேசுனதைப் பார்த்து கடுப்பான ராதிகா தன்னோட கைய கண்ணாடில அடிச்சுக்குவாங்க. அப்படி அடிக்கும் போது ரத்தம் வந்துடுச்சு. அப்ப கூட “நீங்க பேசுனது எனக்கு ரொம்ப புடிச்சிச்சு.. சூப்பரா நடிச்சீங்க..” அப்படின்னு என்னை பாராட்டுனாங்க. இது மாதிரி எல்லாம் யார் செய்வாங்க? அரசி சீரியல் அவங்களோட சொந்த தயாரிப்பு. நடிப்பு மட்டுமில்லாமல் எல்லா வேலையும் சேர்த்து ராதிகா தான் செஞ்சாங்க.
அதுவே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதோடு நான் நடிச்சதுக்கு என்ன பாராட்டுனாங்க. அதன் பிறகு அந்த சீன் டிவி-ல வந்ததை நடிகர் சரத்குமார் பார்த்திருக்காரு. பாத்துட்டு இந்த நடிகர் நல்லாவே நடிக்கிறார்.
இவரை நம்மளோட படத்துல கண்டிப்பா யூஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லி இருக்காரு. இதை கேட்டுட்டு வந்து ராதிகா என்னிடம் மறுநாள் சொன்னாங்க. மறுவருடம் அவங்க “சண்டமாருதம்” அப்படிங்கற படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தாங்க.
இந்தப் படத்தில் தானும் சரத்குமாரும் ஒரு டயலாக் பேசியதாகவும், அதற்கும் சரத்குமார் தன்னை பாராட்டியதாகவும் பாபூஸ் கூறி இருந்தார். கூட நடிக்கும் சக நடிகர்களை பாராட்டி விட்டால் தங்களுடைய ஸ்டேட்டஸ் குறைந்து விடுமோ என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இவர்களை போல நடிகர் நடிகைகளை பார்க்க முடியுமா? என்று மகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களை பாபூஸ் கூறியுள்ளார்.