படத்தின் வெற்றியை கணக்கிட்டு நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதற்கு தலைகீழாக நடிகர்கள் ஒருவரை பார்த்த ஒருவர் போட்டி போட்டுக் கொண்ட தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு நடிகர் விஜயின் சம்பளத்தை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் தானாகவே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். கமலஹாசனும் விக்ரம் திரைப்படத்திற்கு பின்பு தன்னுடைய 30 கோடி சம்பளத்தை 100 கோடியாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க சிம்பு சரியாக படபிடிப்பு தளத்தில் வேலை பார்க்காததால் அவருக்கு பின் வந்த தனுஷ் பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனராகவும் மாறிவிட்டார்.
இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்பொழுது சிவகார்த்திகேயன் வெற்றி படங்கள் கொடுப்பதிலும் சம்பளத்தை உயர்த்துவதிலும் முன்வந்து நிற்கிறார். தற்பொழுது சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால் சிம்பு 8 கோடி மற்றும் தனுஷ் 10 மட்டுமே வரக்கூடிய நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த உயர்வை பார்த்து நாங்கள் தான் சீனியர் எங்களுக்கும் அதைவிட அதிக சம்பளம் அதாவது 35 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேட்பதாக வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்காமல் சம்பளத்தில் மட்டும் நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்வது முறையானதாக இல்லை என்றும் இவர்கள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு தான் தலைவலியாக மாறுகிறது என்றோம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.