நடிகை மற்றும் பாஜக பிரமுகரான குஷ்புவுக்கு டுவிட்டரில் வந்த சோதனை!

Photo of author

By Parthipan K

நடிகை மற்றும் பாஜக பிரமுகரான குஷ்புவுக்கு டுவிட்டரில் வந்த சோதனை!

நடிகை குஷ்பு படம் நடிப்பதில் இருந்து அரசியல் உலகத்தில் காலடி எடுத்து வைத்தார்.காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவியக் குஷ்பு ஆயிரம் விளக்கு என்ற தொகுதியில் நின்று தோல்வியைக் கண்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வரும் நடிகை குஷ்புவை ட்விட்டரில் பதிமூன்று லட்சம் பேர் குஷ்பு அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர்.குஷ்பு அவர்கள் 710 பேரைப் பின் தொடர்கிறார்.

இந்த நிலையில் பாஜக கட்சி பிரமுகரான நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களின் மூலம் ஹேக் செய்யப்பட்டது அவரது அனைத்துப் பதிவுகளும் அழிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அவரது ஐடி முடக்கப்பட்டு @khushundar என்பதற்கு பதிலாக briann என்கிற ஐடி பெயரில் உள்ளது.

அதற்குப் பிறகு பின்னூட்டம் ஏதும் அதில் இடம் பெயரவில்லை. கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது என்பது வேடிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.