கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா!

0
181

கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா!

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனது வித்தியாசமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, உத்தமவில்லன், துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது மாளிகை, பிசாசு 2, கா, நோ என்ட்ரி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த பேண்டஸி படத்தில் அவர் கடல்கன்னியாக நடிக்கிறார்.

ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகை என்பதாலும் அவருடைய உயரமும் வசீகரமான தோற்றமும் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் இந்த பேண்டஸி கதையில் அவரை கடல்கன்னியாக நடிக்க தேர்ந்தெடுத்ததாக படக்குழு கூறியுள்ளது. இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவே ஆகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி. நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் நிறைய அனிமேஷன் வேலைகள் இருப்பதால் தற்போதே அனிமேஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Previous articleகோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை!
Next articleஇந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்!