தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விஜி பிரபல நடிகை சரிதாவின் தங்கை ஆவார். இவருக்கு பாரதிராஜாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று தேடி வந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில்தான் பாரதிராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார் நடிகை விஜி.
அதாவது, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் தனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கதாபாத்திரமானது முதல் மரியாதை ராதா அவர்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கும் என தெரிவித்ததாகவும் ஆனால் உண்மையில் நடந்தது பரிசல் ஓட்டும் ஒரு பெண்ணாக வடிவேலுவுக்கு துணையாக காமெடி நடிகையாக நடித்திருந்தது மிகவும் ஏமாற்றத்திற்குரிய விஷயமாக மாறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பாரதிராஜா அவர்களிடமும் நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று அவர் பலமுறை தெரிவித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பின்பு 100 படங்களுக்கு மேல் தனக்கு காமெடி நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்தது என்றும் தான் என்றுமே காமெடிக்கு செட் ஆக மாட்டேன் என்றும் காமெடி கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் முதல் மரியாதை ராதாவின் கதாபாத்திரத்தை போன்ற ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் தனக்கு காத்திருக்கிறது என நம்பி படபிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும் பாதியிலேயே சென்றுவிடலாம் என்பது போன்ற எண்ணங்கள் தோன்றியது என்றும் ஆனால் பாரதிராஜா அவர்களின் உடைய திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிப்பது கூட மிகப் பெரிய அபூர்வமான விஷயம் என்பதால் பல கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு திரைப்படத்தில் நடித்து முடித்ததாக நடிகை விஜய் தெரிவித்திருக்கிறார்.