நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம்

0
150

நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம்

நடிகை தன்யா பாலகிருஷ்ணா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த வருடம் மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் இயக்குனரை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “தன்யா இயக்குநர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியில் அவரை திருமணமும் செய்துக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு திருமணமாகி ஒரு வருடமாகியும், இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்ற பரபரப்பு தகவலை கல்பிகா தெரிவித்துள்ளார்.

மேலும் தன்யா தனது படங்களின் ப்ரொமோஷன்களை தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். “குறிப்பாக அவர் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அவரது கணவர் தடுப்பதாக நான் கருதுகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னிகயில் தன்யாவின் இந்த திருமண விவகாரம் குறித்து கல்பிகா பேசியிருந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், தன்யா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வீடியோவை நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

யூடியூப் வீடியோக்கள் ஏதேனும் வழிகாட்டுதலை மீறினால், அவை யூடியூபருக்கு மின்னஞ்சல் மூலம் முறையாகத் தெரிவித்த பிறகு தான் நீக்கப்படும். ஆனால் இந்த விஷயத்தில், எனக்கு எந்தத் தகவலும் முறையாக வரவில்லை” என்று கல்பிகா கூறியுள்ளார். அதோடு தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக அவர், “என்னை மிரட்டப் பார்க்கிறாயா? அல்லது என்னைக் கண்டு பயந்துவிட்டாயா? எப்படியிருந்தாலும், நான் சரியான பாதையில் செல்கிறேன்” என்றும் கல்பிகா கூறியுள்ளார்