Mexico:உடலைத் தூய்மைப்படுத்தும் என நினைத்து தவளையின் விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.
வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ். இவர் மதம் சார்ந்த சடங்குகளில் அதிக அளவில் நம்பிக்கை கொண்டு வந்துள்ளார். அந்த நாட்டில் நடந்த ஒரு மத சடங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். ரட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை குடிப்பதே அந்த சடங்காகும். இந்த தவளையின் விஷத்தை குடித்தால் உடல் தூய்மையாக மாறும் என்று நம்பி இருக்கிறார்கள்.
எனவே நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் தவளையின் விஷத்தை குடித்து இருக்கிறார். இதனால் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது. அருகில் இருப்பவர்கள் மருத்துவரை அணுக அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை நடிகை கண்டுகொள்ளவில்லை.இதனால் மேலும் அவரது உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்று பரிதாபமாக உயிரிழந்தார். அறிவியல் ரீதியாக சாத்தியப்படாத ஒன்று மூடநம்பிக்கையே.
மத சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் நாம் ஒரு சில சமயங்களில் நமது மனதை வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனால் அவற்றை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. அதற்கு எடுத்துக்காட்டாக தவளை விஷத்தை குடித்து உயிரிழந்து இருக்கிறார் நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ்.
நடிகை ஒருவர் மூடநம்பிக்கையே பின்பற்றி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.