திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும்  வீடியோ! 

Photo of author

By Parthipan K

திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும்  வீடியோ!

தமிழ் படங்களில் கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை ஹன்சிகா. ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் அண்மையில்தான் தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் தொழில் அதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.இவர்களின் திருமணம் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில்  நாளை நடக்க இருக்கின்றது.

திருமணத்திற்கு முன்பு நடக்கும் சடங்குகள் அனைத்தும் கடந்த மூன்று நாட்களாக ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மெஹந்தி பங்க்ஷன் புகைப்படங்கள் வெளியானது.இந்நிலையில் இவர்களுடைய திருமண கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது.மணமகள் கோலத்தில் நடிகை ஹன்சிகா மணமகன் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உற்சாகத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.