கீர்த்தி சுரேஷ்: இவர் திரைப்பட தயாரிப்பாளர் “சுரேஷ் குமார்” அவர்களின் மகள் ஆவார். “2013 ஆம்” ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் “கீதாஞ்சலியில்” குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் தனது முதல் காலடியை பதித்தவர். சிறந்த பெண் அறிமுகத்திற்கான “SIIMA” விருதை மலையாளத்தில் பெற்றவர். தமிழ்த்திரையுலகில் “என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் 2015 ஆம் ஆண்டு எல். விஜய் உருவாக்கத்தில் வெளியானது.
அதன் பின் தமிழில் வெளியான “ரஜினி முருகன்”, படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து “பைரவா” என்ற படத்தில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய இவர், “மகாநதி, சர்க்கார், அண்ணாத்த” போன்ற படங்களில் நடித்திருந்தார். இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் “காதல் மற்றும் கல்யாண” விவகாரங்களுக்கு குறைவே கிடையாது. இவர் வலைத்தளங்களில் வரும் எந்த செய்திக்கும் எந்த பதிலும் தெரிவிக்காமல் கடந்து செல்வார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு, அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும், கீர்த்தி அவருடைய நண்பரையே, கணவராக தேர்தெடுத்து உள்ளதாகவும், செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அவருடைய நண்பர் “துபாயில்” தொழிலதிபராக உள்ள “ஆண்டனி தாட்டில்” என்றும், அவர் “கொச்சியில் தங்கும் விடுதிகளும்” நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இவர் கீர்த்தியின் “பள்ளி தோழர்” என்றும் செய்திகள் வளம் வந்து கொண்டிருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சில நாட்களுக்கு முன்பு “கீர்த்தி சுரேஷ்” அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் “ஆண்டனி தாட்டில்” அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், புகைப்படத்துடன் “15 ஆண்டுகால உறவு, இனியும் தொடரும்”.. “ஆண்டனி கீர்த்தி” என பதிவிட்டிருந்தார். இது தற்போது அவரது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.