நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம்!! மாப்பிள்ளை இவர் தானா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என தகவல்கள் பெரும் அளவில் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் அவர் தனது படிப்பில் ஆர்வம் காட்டி பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். பிறகு மீண்டும்  அவர் திரையுலகிற்கு வந்தார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார்.

இவர் நடிகையர் திலக படத்தை நடித்து, இந்த திரைப்படம் பெரும் அளவில் வெற்றி பெற்று சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல வதந்திகள் பரவின. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் அவரை திருமணம் செய்ய போவதாகவும் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் இவர் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் பல வதந்திகள் பரவின.

ஆனால் அந்த செய்தியை உடைத்தெறியும் வகையில் கீர்த்தி சுரேஷ் தந்தை இந்த தகவல் தவறானது என கூறினார். இந்த நிலையில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளதாகவும், மாப்பிள்ளை பெற்றோர்கள் பார்த்ததாகவும், அது அவர் உறவினர் என்றும் கூறப்படுகிறது. இந்த திருமணம் கோவா-வில் நடக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்திகளுக்கு கீர்த்தி சுரேஷ் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.