கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! இன்ஸ்டாகிராமில் வெளியான லேட்டஸ்ட் புகைபடம்!!

0
191
Actress Keerthy Suresh in Glamor Dress!! Latest photo released on Instagram!!
Actress Keerthy Suresh in Glamor Dress!! Latest photo released on Instagram!!

கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! இன்ஸ்டாகிராமில்  வெளியான லேட்டஸ்ட் புகைபடம்!!

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. அதன் பிறகு 2016 ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இணைத்து ரஜினி முருகன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் இவரது சினிமா வாழ்க்கைக்கே மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு தொடரி ,ரெமோ ,பைரவா உள்ளிட்ட பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கினார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய மகாநதி என்னும் படம் கீர்த்தி சுரேஷ் யார் என்பதை ஒட்டுமொத்த திரை உலகினருக்கே அடையாளம் காட்டியது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கொடுத்தது.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் கண்ணிவெடி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். அதற்கான படப்பிடிப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜோக்கர் ,தீரன் அதிகாரம் ,கைதி போன்ற படங்களை தயாரித்த வந்த வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக திர்ல்லர் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படம் ஒரு பெண்ணின் கதையை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் மிகவும் கிளாமராக ஸ்டைலாகவும் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleகொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோவாக மாற நினைக்கும் தோனி!! முதல் படத்திற்கே இவ்வளவு பேராசையா??
Next articleபிரபல நடிகருடன் இணைந்து  நடிக்கும் அதிதி சங்கர்!!