நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

Photo of author

By Parthipan K

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், நடிகை குஷ்பூ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த  முட்டுக்காட்டில் போலீசாரால் வழிமறிக்கப்பட்டு அங்கேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “வலுக்கட்டாயமாக தனது பயணத்தை தடுத்து நிறுத்தியதாகவும், அமைதி போராட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி வழங்க மறுப்பது ஏன்?” என்றும் பதிவிட்டுள்ளார்.