மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கும் லைலா!! வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியிருக்கிற லைலா!

Photo of author

By Parthipan K

தமிழ்சினிமாவில் ஜொலித்த பல நடிகைகளில் ஒருவர் லைலா. இவரது துரு துரு  நடிப்பினால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்த பல நடிகைகள் சினிமாவிற்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்து விட்டு இப்போ நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க அப்படி இவங்களும் வர மாட்டாங்களா என்று ரசிகர்கள் ஏங்கிய நடிகைகளில் ஒருவர் லைலா.

கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா, அதன்பின் தீனா, தில் தில் படங்களில் இவருக்கு பெரும் திருப்பத்தை கொடுத்தது.

நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து ஆகிய படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் ‘சூர்யாவுக்கு நல்ல ஜோடி’ என்ற பெயர் வாங்கினார். பிதாமகன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை அள்ளி தந்தது.

தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தவர் பிரசன்னாவுடன் ‘கண்டநாள் முதல்’, அஜித்துடன் ‘பரமசிவம்’ படங்களில் நடித்தார். ‘திருப்பதி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். பிறகு திருமணமாகி குடும்பம் குழந்தை என குடும்பஸ்ரீ ஆக மாறி கோலிவுட் பக்கத்திலிருந்து விலகிச் சென்றார்.

சினிமாவில் மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டதாம். எனவே தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் ‘ஆலிஸ்’ எனும் ஹாரர் த்ரில்லர் பேய் வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்க உள்ளார் லைலா. பல வருடங்களுக்குப் பிறகு திரையில் லைலாவை காணவிருக்கும் ஆர்வம்  ரசிகர்கள்  மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.