”என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோ போட்றேன்…” சர்தார் மேடையில் நடிகை லைலா!

Photo of author

By Vinoth

”என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோ போட்றேன்…” சர்தார் மேடையில் நடிகை லைலா!

நடிகை லைலா 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் சர்தார் திரைப்படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். சர்தார் திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

தீபாவளி திங்கள் கிழமை வருவதால் மூன்று நாட்கள் முன்பாகவே அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நடிகை லைலா கலந்துகொண்டு பேசினார்.

வழக்கம் போல தன்னுடைய வெகுளித்தனமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்த அவர் “என்னை இந்த படத்தில் நடிக்கும் போது அதிகளவில் டார்ச்சர் செய்தனர். அது சம்மந்தமான வீடியோவை நான் விரைவில் ரிலீஸ் பண்றேன்” என சர்தார் படக்குழுவை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார். கடைசியாக பரமசிவன் படத்தில் கதாநாயகியாக நடித்த லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்தார் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.