என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

Photo of author

By CineDesk

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகளை அம்மாநில போலீசார் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன

பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள் ஆகியோர் இந்த என்கவுண்டரை பாராட்டி வருகின்றார். ஆனாலும் ஒரு சிலர் இது சட்டப்படி நடந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ’ஒரு பெண்ணாக ஒரு தாயாக இந்த என்கவுண்டரை நான் வரவேற்கின்றேன். இந்த என்கவுண்டரை செய்தவர்கள் எனக்கு ஹீரோ போல் தெரிகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக இதனை நான் கண்டிக்கின்றேன்.

நம் நாட்டில் நீதி கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. நிர்பயா விவகாரம் உட்பட பல பெண்களுக்கு எதிரான கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 10 வருடங்கள் 15 வருடங்கள் ஆகியும் தண்டிக்கப்படாமல் உள்ளனர். தாமதமாக கிடைக்கும் நீதி தான் இது போன்ற என்கவுண்டர்களுக்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்தால் இம்மாதிரியான என்கவுண்டர்கள் தேவை இருக்காது என்று கருதுகிறேன் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்