ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை

Photo of author

By Parthipan K

ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை

Parthipan K

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்னும் திரைப்படத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருப்பார் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ்.

சாலை பாதுகாப்பை மையமாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பினால், வசீகரமான முகத்தோற்றத்தினாலும் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.

 

இவர் மலையாளத்தில் வெளியான ‘மகேசிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக திரையுலகிற்கு வந்தார்.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘தீதும் நன்றும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் சூர்யா நடித்து தீபாவளிக்கு OTT தளத்தில் வெளியாக உள்ள ‘ஜெயபீம்’ திரைப்படத்தில் பழங்குடி பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் நேற்று அருண் ஆண்டனி ஓனிசேரில் என்னும் நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று அக்டோபர் 5 ஆம் தேதி கேரளாவின் வயநாட்டில் நடந்துள்ளது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமண புகைப்படத்தை இன்று இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது திரையுலகினரும், ரசிகர்ளும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.