பீட்டர் என்னுடைய கணவர்..! வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள்! புகார் கொடுத்த மனைவி.!! கிளம்பியது புது சர்ச்சை

Photo of author

By Jayachandiran

நடிகை வனிதா நேற்று (ஜூன் 27) கிறித்தவ முறைப்படி பீட்டர்பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் பலர் திருமண வாழ்த்தினை தெரிவித்தனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு குழந்தை இருப்பதாகவும் கடந்த 7 வருடங்களாக பீட்டர்பால் தன்னிடம் இருந்து பிரிந்து வாழ்வதாகவும், வனிதாவிடம் இருந்து தனது கணவரை பிரித்து தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் பீட்டரின் மனைவி புகார் கூறியுள்ளார். பீட்டர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென ஒரு பெண் அவர்மீது வழக்கு தொடுத்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.