என் கணவர் ஒழுக்கமானவர்.! நடிகை வனிதா ஆதாரத்துடன் பேசியதால் நெட்டிசன்கள் விமர்சனம்

Photo of author

By Jayachandiran

நடிகை வனிதா மூன்றாவது கணவராக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் கடந்த சனிக்கிழமை கிறித்தவ முறைப்படி நடந்தது. திருமணத்தின் போது ஏஞ்சல் உடையில் நடந்து வந்து பீட்டர்பாலுடன் கைகோர்த்து பின்னர் லிப்லாக் முத்தமும் கொடுத்தனர்.

 

இவர்களது திருமணம் சமூகவலைதளங்களில் பெரும் விமர்சனம் ஆனது. இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி, விவாகரத்து தராமலே வனிதா தன் கணவரை திருமணம் செய்துள்ளதாகவும், தன் கணவரை மீட்டுத் தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரது பேட்டிகளில், பீட்டர் மது, மாதுக்கு அடிமையானவர் என்று விளாசி தள்ளினார்.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை வனிதா வீடியோ வெளியிட்டார். அதில், தனது கணவர் பீட்டர் பால் ஒழுக்கமான டீடோட்லர் என்றும் அவருக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும் கூறினார். திருமணத்தின் போது ஓபன் செய்த ஷாம்பெய்ன் பாட்டிலை கூட அவர் குடிக்கவில்லை. ஆல்ஹாலிக் ஒயின்தான் குடித்தார்’ என்று கூறினார்.

 

திருமணம் நடந்த மறுநாளே ஏற்பட்ட புகாரை தொடர்ந்து இன்றுவரை வனிதா திருமணம் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் எதற்கும் அசராமல் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் வனிதா.