தனது திருமணத்தை அவதூறாக பேசியதால் வழக்கில் மாட்டிவிட்ட வனிதா..!!

0
187

நடிகை வனிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி பீட்டர்பால் என்பவரை கிறித்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது மதுப்பாட்டிலை குலுக்கியதும், லிப்லாக் காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த திருமணத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

 

இதையடுத்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசெபத் ஹெலன் என்பவர் தனது கணவரை மீட்டு தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன் மீது தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு இணையத்தின் மூலமாக வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் சூர்யாதேவி என்ற இளம்பெண் வனிதா திருமணம் குறித்து இணையத்தில் அவதூறாக பேசியதை கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா, காவல்துறையில் புகார் தெரிவித்த நிலையில், அவரை விரைவில் காவல்துறை கைது செய்யலாம்.

மேலும் அப்பெண் இதற்கு முன்பு தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து கைதானவர் என்பதையும் தனது இன்ஸ்டாகிராமில் வனிதா கூறியுள்ளார்.

Previous articleமூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
Next articleவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்