கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

0
104

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீனா தற்போது தனது மொத்த உடலையும் தானமாக அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா மற்றும் அவருடைய கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

சிகிச்சைக்குப் பின் ஓரளவிற்கு பாதிப்பிருந்து மீண்ட அவரது கணவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று காலமனார்.

அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போதுதான் மீனா கணவரின் பிரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “என் கணவருக்கு உடல் உறுப்பு தானம் சரியான நேரத்தில் கிடைத்திருந்தால் அவர் இன்று உயிரோடு வாழ்ந்திருக்கலாம். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தால் 8 பேரைக் காப்பாற்றலாம். அதனால் நான் இப்போது உடல் உறுப்பு தானம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.