நடிகை சமந்தாவை ஸ்பைடர்மேனாக மாற்றிய நெட்டிசன்கள்! அதற்கு அவர் செய்த ரியாக்சன்?

Photo of author

By Jayachandiran

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முக்கிய நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

நடிகை சமந்தா உடற்பயிற்சி, யோகா செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். சமீபத்தில் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி உடலை மேலே தூக்கியவாறு யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதில், கார்டனிங் பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விசயம் யோகா என்று பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து சமந்தாவின் புகைப்படத்தை எடுத்து ஸ்பைடர்மேன் ஒரு மேற்கூரையில் உட்கார்ந்து இருப்பது போல் பொருத்தி மீம்ஸ் தயாரித்து கலாய்த்துள்ளனர். நெட்டிசன்களின் மீம்ஸ் மிகவும் பிடித்துப்போனதால் அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பகிர்ந்துள்ளார்.