1980 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் ‘நடிகை நளினி’. திரை உலகிற்கு ‘ஒத்தையடி பாதையிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய, ‘நடிகர் ராமராஜனை’ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முற்றிலுமாக திரை உலகில் இருந்து விலகிக் கொண்டார். இவர்களுக்கு ‘அருணா, அருண்’ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர், கணவர் மீது இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
எனினும், இருவரும் இதுவரை ‘ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையேயான உறவு குறித்து பல பேட்டிகளில் நளினி பெருமையாக பேசி உள்ளார். விவகாரத்துக்கு பின்னும் ‘தன் கணவர் ராமராஜனை காதலித்து வருவதாகவும்’ கூறியுள்ளார். “என்ன ஒரு அழகான பந்தம்”.
தற்போது ஒரு ‘சில படங்களிலும், பிரபல சேனல்களில் சீரியலிலும்’ நடித்து வருகிறார். இவர் ஒரு பேட்டியில், ‘தான் ஒரு முறை கட்டிய புடவையை திரும்ப கட்ட மாட்டேன்’. அது போல் ‘ஒரு நாள் கூட புது புடவையும் கட்டாமல் இருக்க மாட்டேன். தன்னுடைய கட்டிய புடவைகளை வைப்பதற்கு என்றே ஒரு தனி வீடு வைத்திருப்பதாக கூறினார்’. என் பிள்ளைகளுக்கும் அவ்வப்போது புது புடவைகள் வாங்கி கொடுத்து கொண்டே இருப்பேன். இவர் கூறியதை பார்த்த பலரும், “என்ன புடவைக்கு என்றே தனி வீடா?” என ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.