மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி!!! 

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் தனது நடிப்பினால் பிரபலமான நடிகை நவ்நீத்  கௌர் ராணா.

இவர் தமிழ் படத்தில் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ‘அரசாங்கம்வாடா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற மஹாராஷ்ட்ரா மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் சிவசேனா கட்சியை சேர்ந்த இரு முறை எம்பியாக இருந்த   ஆனந்த் ராவ் என்பவரை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்பி ஆனார்.இந்நிலையில் நடிகையும் எம்பியுமான நவ்நீத் கௌர்  மற்றும் அவருடைய கணவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணா ஆகியோர் இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவரது மகள் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் மூலம் நவ்நீத்  கௌர் கேட்டுக்கொண்டார்.