ஒரு நாளைக்கு 15000 சம்பளம் வாங்கும் பாக்கியலட்சுமி சீரியலின் நடிகை!! யாருன்னு நீங்களே பாருங்க!!

0
139
Actress of Pakkiyalakshmi serial who earns 15000 a day !! See for yourself who !!
Actress of Pakkiyalakshmi serial who earns 15000 a day !! See for yourself who !!

ஒரு நாளைக்கு 15000 சம்பளம் வாங்கும் பாக்கியலட்சுமி சீரியலின் நடிகை!! யாருன்னு நீங்களே பாருங்க!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இது 2020 ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது மேலும் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும். இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீ மோயி பெங்காலி தொடரின் மறுஆக்கம் ஆகும்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் இத்தொடரை டேவிட் என்பவர் இயக்குகிறார் இத்தொடரில் கதாபாத்திரமாக சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் வேலு லட்சுமணன் சதீஷ் ரேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள். இத்தொடரின் கதை இல்லத்தரசியாகவும் அம்மாவாகவும் மனைவியாகவும் மருமகளாகவும் போன்ற பல பொறுப்புகளில் வகிக்கிறார்.

ஆனால் இந்த இல்லத்தரசியை கணவர் மாமியார் மாமனார் எப்படி அவமதிக்கிறார்கள் என்பதும் பாக்யலக்ஷ்மி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறார் என்பதும் மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு கட்டத்தில் அவரின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டு எடுத்தால் என்பது தான் கதை.

இந்நிலையில் இந்த சீரியல் தற்போது உச்ச கட்ட பரபரப்பில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த சீரியல் பற்றி தற்பொழுது ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று ஒரு கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. அதில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்யலக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தின் கணவரான கோபிநாத் கதாபாத்திரத்திற்கு ரூபாய் 12000 சம்பளமும், ராதிகா கதாபாத்திரத்திற்கு ரூபாய் 12,000 சம்பளமும், இனிய கதாபாத்திரத்திற்கு ரூபாய் 8000 சம்பளமும், ஈஸ்வரி கதாபாத்திரத்திற்கு ரூபாய் 12,000 சம்பளமும், ஜெனிஃபர் கதாபாத்திரத்திற்கு ரூபாய் 10,000 சம்பளமும், செழியன் கதாபாத்திரத்திற்கு ரூபாய் 10,000 சம்பளமும், எழில் கதாபாத்திரத்திற்கு ரூபாய் 10,000 மற்றும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு ரூபாய் 10,000 சம்பளம் வழங்கப்படுகிறது என தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த தகவல் ஒரு நாள் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகம் சம்பளம் வாங்குவது இந்த சீரியலின் முன்னணி கதாபாத்திரத்தில் விளங்கும் பாக்யலட்சுமி கதாபாத்திரம் தான்.

author avatar
CineDesk