7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

Photo of author

By Parthipan K

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

Parthipan K

சினிமா திரையுலகில் நடிகை பிராச்சி தெஹ்லான்,  மம்மூட்டி நடித்து வெளியான  ‘மாமாங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.

மேலும் இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் திருமணம், வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது.

நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரோகித் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர், இவர் வன விலங்கு பாதுகாவலராகவும் இருக்கிறார். எங்களது திருமணம் மிகவும் எளிமையாக எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

லாக்டவுன் காரணமாக, 50 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்க இருக்கிறோம்.இந்த திருமணம் டெல்லிக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் நடக்கவிருக்கிறது ஏனென்றால் விசாலமான இடம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.