ரசிகர்களை இப்படியெல்லாம் குஷிப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்!!!

0
129

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் எண்ணத்தில் நடிகை ரம்யா பாண்டி புதிதாக ஒரு கெட்டப்பை யோசித்து, அதற்காக தன்னை மெருகேற்றி பாகுபலி படத்தில் தேவசேனாவாக உருவெடுத்து வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே திரைப் பிரபலங்கள் நானி, பிரசன்னா, ராம் சரண், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டபலரும் அவரவர்கள் வீட்டிலிருந்தபடியே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த கெட்டப்பை பார்த்த ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த அளவுக்கு  ரொம்ப அழகாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள்  சும்மா தாறுமாறாக குவிகிறது.ஆண் தேவதை படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பின்பு குக் வித் கோமாளி படத்தின் மூலம்  பெரிதும் ரசிகர்களால் கவரப்பட்டார். அதன்பின் சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்க போவதாக தகவல் கசிந்தது.

அதன் பின் தற்போது கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்

.

author avatar
Parthipan K