காதல் தோல்வி குறித்து மனம் திறக்கும் நடிகை ராஷி கண்ணா!!

Photo of author

By Gayathri

தமிழ் திரை துறையில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர், அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் என முன்னணி நடிகர்களோடு அடுத்தடுத்த படங்களில் ஹிட் கொடுத்துள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி வெப் சீரிஸ் களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தற்பொழுது நடித்து வருகிறார். “தி சபர்மதி ரிப்போர்ட்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய ரிஷி கண்ணா, தனக்கு பிரேக்கப் நடந்த பொழுது இருந்த மனநிலை குறித்து பேசி இருக்கிறார்.

அவர் தன்னுடைய பிரேக்கப் குறித்து பேசும் பொழுது, அந்த காலகட்டம் எனது வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டம் என்று தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து நான் மீண்டு வருவதற்கு என் நண்பர்கள் தான் உதவியாக இருந்தனர். மேலும் அவர்கள் கூறியபடி நடிப்பின் மீது கவனம் செலுத்தினேன் என்றும் பேசியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், தெலுங்கில் என்னுடைய முதல் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக சென்றேன். கோவிலில் இருந்து வெளியே வந்த பொழுது அங்கிருந்த மக்கள் அனைவரும் என்னை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து என்னை வெளியே கொண்டு வர பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டனர்.

அந்த சம்பவத்தை என்னால் எப்பொழுதும் மறக்க முடியாது என்று கூறியதுடன் மட்டுமின்றி, அப்பொழுது நான் முடிவு செய்தேன் இனி நடிப்பை மட்டும் தான் நான் காதலிக்க போகிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.