பாலிவுட் ராணியை இயக்கவிருக்கும் ‘மண் வாசனை’ நாயகி!

0
216
Actress Director Revathy and Bollywood actress Kajol

80களின் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமா உலகில் அறிமுகமாகி தனக்கென ஒரு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் தான் ஆஷா என்னும் இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ரேவதி. முதல் படத்திலேயே மிக அழுத்தமான கேரக்டரில் எதார்த்தமாக நடித்து மக்களின் மனசில் இடம் பிடித்தார்.

கதாநாயகனுக்கு ஏற்ற கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக கதையை ஏற்று நடித்தவர் ரேவதி.

‘மண்வாசனை’ முத்துப்பேச்சி, ‘புதுமைப்பெண்’ சீதா, ‘வைதேகி காத்திருந்தாள்’ வைதேகி, ‘கன்னிராசி’ தனலட்சுமி, ‘மௌன ராகம்’ திவ்யா, ‘அரங்கேற்ற வேலை’ மாஷா, ‘அஞ்சலி’ சித்ரா, ‘கிழக்கு வாசல்’ தாயம்மா
கேரக்டர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலிருந்து என்றுமே நீங்காத ஒன்று.

பிரேமா பாசம் படத்தின் படப்பிடிப்பின் போது, ​​ரேவதி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் சந்திர மேனனை காதலித்தார். காதல் ஜோடி 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். சிறிது காலத்தில் தம்பதியரின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின, அது காலப்போக்கில் மோசமாகிவிட்டது.

1993 இல், ரேவதியும் சுரேஷும், சுரேஷ் இயக்கிய புதிய முகம் என்ற வெற்றிப் படத்தில் நடித்தனர். இந்த படம், அவர்களின் கடைசி திரைப்படமாக விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சூப்பர்ஹிட் ஆனது.

எண்ணங்களின் மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் ரேவதிக்கும் சுரேஷுக்கும் இடையே முடிவில்லாத வாதங்களாக மாறிவிட்டன. அவர்கள் ஒரு சிறந்த ஜோடி போல் தோன்றினாலும் அவர்களின் திருமண வாழ்க்கையில் கொந்தளிப்பு அதிகரித்தது. 10 வருடங்களுக்கு மேல் தனியாக வாழ்ந்த இருவரும் 2013ல் விவாகரத்து பெற்றனர்.

இதன் பிறகு நடிகை ரேவதி, இயக்குனர் ரேவதியாக புதிய அவதாரம் எடுத்தார். 2002ல் மித்ர மை பிரண்ட் என்னும் ஆங்கில படத்தை இயக்கு இவர், சல்மான் கான் மற்றும் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். நடிகை கஜோலை வைத்து ரேவதி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதை கஜோலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Previous articleCSKvsPBKS: கிரிக்கெட் களத்தில் காதல் வலை வீசிய CSK வீரர்
Next articleசூடான பால் உடலில் கொட்டியதால் 1 வயது குழந்தை பரிதாப பலி