தெருவில் நின்ற நடிகையை போவோர் வருவோர் எல்லாம் கட்டிப்பிடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

0
210

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்திய தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். இதனால் மன அழுத்தம் குறையும் என்றும் இதயம் பலம் பெறும் என்றும் ஒரு நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த தினம் இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு தினம் இருப்பதே பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை இந்தி நடிகை ரிச்சா சத்தா என்பவர் இந்த தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று முன் தினம் அதாவது ஜனவரி 21ஆம் தேதி மும்பையின் முக்கிய வீதி ஒன்றில் நின்று கொண்டு என்னை கட்டிப் பிடியுங்கள் என்ற பதாகையோடு நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அவரை கட்டிப்பிடித்தனர். அவரோ தன்னை கட்டிப்பிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ஆம் தேதி இந்த தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் இப்படி ஒரு தினம் இருப்பதையே பலர் அறிந்துகொண்டு மற்றவர்களுடன் கட்டி பிடித்து வருகின்றனர் கட்டிப்பிடி தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

https://www.instagram.com/tv/B7lmuXpjzMI/?utm_source=ig_embed
Previous articleரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !
Next articleஇன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here