கிஷோர் கே சாமி மீது பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை ரொகிணி

Photo of author

By Sakthi

கிஷோர் கே சாமி மீது பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை ரொகிணி

Sakthi

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்பாக அவதூறு பரப்பியதாக தெரிவித்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 தினங்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.அவர் ஒரு அரசியல் விமர்சகர் என்ற முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார். அதன்படி பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய விமர்சனத்திற்கு பயந்து தங்களுடைய தில்லாலங்கடி வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் கூட தவறு செய்தால் அந்த தவறை சுட்டிக்காட்டி பதிவிடாமல் இருக்கமாட்டார் கிஷோர் கே சாமி அந்த அளவிற்கு அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வம் மிகுந்தவர் கிஷோர் கே சாமி என்று தெரிவிக்கப்படுகிறது.இவருடைய விமர்சனம் காரணமாக, பல அரசியல் கட்சி தலைவர்கள் தவறு செய்து விட்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றதெல்லாம் வேறு கதை என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெண் பத்திரிக்கையாளர் தொடர்பாக அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தெரிவித்து புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கிஷோருக்கு சாமி மீண்டும் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், அவர் மீது நடிகை ரோகினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தற்போது அளித்திருப்பதாக தெரிகிறது.

அதாவது முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாதுரை கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக அவதூறாக பதிவிட்ட கிஷோர் கே ஸ்வாமி அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெரிந்ததுதான். திமுக நிர்வாகி ஒருவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் கிஷோர் கே ஸ்வாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதோடு பெண் பத்திரிக்கையாளர் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தி உரையாற்றிய ஒரு வழக்கு தொடரப்பட்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், நடிகை ரோகினி இணையதளம் மூலமாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார் .தன்னைப் பற்றியும் மறைந்த தன்னுடைய கணவர் ரகுவரனை பற்றியும் சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்து இருக்கின்றார். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் பெண் பத்திரிக்கையாளர் தொடர்பாக அவதூறாக பேசிய விவகாரத்தில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.