நடிப்பதை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை சமந்தா!

Photo of author

By Parthipan K

நடிப்பதை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை சமந்தா!

Parthipan K

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழ், தெலுங்கு பிறமொழிகளில் எக்கச்சக்கமான படங்களை நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

நட்சத்திர தம்பதிகளான நாகர்ஜுன்-அமலா இவர்களுடைய மூத்த மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சமந்தா அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ஃபேஷன் டிசைனிங் துறையில் இணைந்துள்ளார்.

அதற்காக “Myntra”என்ற ஃபேஷன் டிசைனிங்  ஆப் ஒன்றின் மூலம் , தான் வடிவமைத்த டிரஸ்களை வினியோகம் செய்வதற்கான விளம்பரங்களில் மட்டுமே தற்போது நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்த myntra app மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இதன்மூலம் ஒரு பெரும் தொழிலதிபராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது.